ஸ்ரீரங்கம்; அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ.,வுக்கு 51 கோடி ரூபாய் சொத்து இருப்பதாக அவரது வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., பொதுசெயலர் ஜெ., இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தனது மனுவில் அசையும் சொத்துக்கள் ரூ. 13 கோடியே 3 லட்சத்து 27 ஆயிரத்து 979 என்றும், அசையாசொத்துக்கள் 38 கோடியே 37 லட்சத்து 40 ஆயிரம் என்றும் ஆக மொத்தம்
51 கோடியே 40 லட்சத்து 67 ஆயிரத்து 979 என்று குறிப்பிட்டுள்ளார். கையிருப்பு மொத்தம் 25 ஆயிரம் மட்டுமே இருப்பதாகவும் மேலும் ஒரு சில வங்கி கணக்கையும் சமர்ப்பித்துள்ளார்.
கடந்த முறை தேர்தலில் போட்டியிட்ட ஜெயலலிதாவின் சொத்துக்களை காட்டி லும் தற்போது 2 மடங்கு மட்டும் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த முறை ஜெ., தாக்கல் செய்த சொத்து விவரம்: அசையும் சொத்துக்கள்: 1.கையிருப்பு: 20 ஆயிரம் ரூபாய் 2.வைப்புத்தொகை: வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களில் சேமிக்கப்பட்டுள்ள வைப்பு தொகையின் மதிப்பு ரூ.2 கோடி
மோட்டார் வாகனங்கள்: 5 கார்கள் அசையா சொத்துக்கள்:15 ஏக்கர் நிலம்-மதிப்பு நான்கு கோடி ரூபாய்
கட்டடங்கள்: போயஸ்கார்டன் உட்பட சென்னை மற்றும் ஐதராபாத்தில் ஐந்து கட்டடங்கள் உள்ளன. அதன் மதிப்பு சுமார் 18 கோடி ரூபாய்.
கருணாநிதியின் சொத்து : திருவாரூரில் போட்டியிடும் தமிழக முதல்வரும், தி.மு.க., தலைவருமான மு. கருணாநிதி தனது வேட்புமனுவில் தனது சொத்து விவரத்தை தெரிவித்துள்ளார். முழு விவரம் இன்னும் சற்று நேரத்தில் அதிகாரப்பூர்வமாக அதிகாரிகள் தெரிவிப்பர்.
No comments:
Post a Comment