சென்னை: தேனி மாவட்டம் ஜக்கம்பட்டியை சேர்ந்த தில்லை நடராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல வழக்கில் கூறியிருப்பதாவது: தேசிய நெடுஞ்சாலைகளில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் வாகனங்களை சோதனையிட்டு பணத்தை பறிமுதல் செய்து வருகின்றனர். இதுபோல் பணத்தை பறிமுதல் செய்ய தேர்தல் கமிஷனுக்கு சட்டப்படி அதிகாரம் இல்லை. திருமணத்துக்கு நகை வாங்கி வந்தாலும் அதையும் பறிமுதல் செய்கிறார்கள். இதனால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதிகள் எலிப்பி தர்மராவ், வேணுகோபால் இன்று விசாரித்தனர். தேர்தல் ஆணைய நடவடிக்கையால் மனுதாரருக்கு என்ன பாதிப்பு ஏற்பட்டுள்ளது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இது பொதுநல வழக்கு. வங்கியிலிருந்து பணம் எடுத்துச் சென்றாலும் பறிமுதல் செய்கிறார்கள். பள்ளி வாகனங்களில் செல்லும் குழந்தைகளையும் கீழே இறக்கி சோதனை செய்கிறார்கள்Õ என மனுதாரரின் வக்கீல் சீனிவாசன் கூறினார். இதைக் கேட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை நாளை தள்ளி வைக்கிறோம். தேர்தல் ஆணையம் விரிவான பதில் மனுவை நாளை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.

No comments:
Post a Comment