சென்னை : சென்னையில் இன்று அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை, இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தா.பாண்டியன் சந்தித்து பேசினார். சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய தா.பாண்டியன், அதிமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் எந்தெந்த தொகுதிகளில் இந்திய கம்யூனிஸ்ட் போட்டியிடும் என நாளை மாலை அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment