Saturday, March 12, 2011

வி.ஐ.பி., தொகுதி உட்பட 107பதட்டமானவை: தேர்தல் கமிஷன்

சிவகங்கை:தமிழகத்தில் வி.ஐ.பி.,க்கள் போட்டியிட உள்ள தொகுதிகள் உட்பட 107 தொகுதிகள் பதட்டமானவை என தேர்தல் கமிஷன் கணக்கிட்டுள்ளது.அதன்படி, சென்னையில் சேப்பாக்கம், ஆயிரம்விளக்கு உட்பட 10,
மதுரை - 10 ,
சேலம் -11,
திருச்சி -9,
திருநெல்வேலி - 9,
வேலூர் - 5,
திருவள்ளூர் - 4,
ஈரோடு - 4,
காஞ்சிபுரம் - 3,
நாமக்கல் - 2
தொகுதிகள் பதட்டமானவை என கணக்கிடப்பட்டுள்ளது. மற்ற மாவட்டங்களான கன்னியாகுமரி, சிவகங்கை, நீலகிரி, தர்மபுரி, கிருஷ்ணகிரியில் தலா ஒரு தொகுதி இந்த பட்டியலில் இடம் பெறுகின்றன.இது குறித்து தேர்தல் அதிகாரி ஒருவர் கூறுகையில்,"" பண பட்டு வாடா, ஓட்டிற்காக கலவரத்தை ஏற்படுத்தப்படக்கூடும் என்ற நோக்கத்தில், பதட்டமான தொகுதிகளாக தேர்வு செய்துள்ளோம். இங்கு சிறப்பு கவனம் எடுத்து, பாதுகாப்பு, கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்,'' என்றார்.

No comments:

print