Sunday, March 13, 2011

அ.தி.மு.க.,வுக்கு பா.பி., ஆதரவு

மதுரை : சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க.,வுக்கு, அகில இந்திய தேசிய பார்வர்ட் பிளாக் ஆதரவு தெரிவித்தது.மதுரையில் நிறுவனர் பி.டி.அரசகுமார் கூறியதாவது:அ.தி.மு.க., கூட்டணியில் மூன்று தொகுதிகளில் போட்டியிட விருப்பம் தெரிவிக்கப்பட்டது. தேர்தலுக்கு பின், கட்சிக்கு முக்கியத்துவம் தருவதாக ஜெயலலிதா கூறியுள்ளார். எனவே, வரும் தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியை ஆதரிப்போம். இக்கூட்டணி வெற்றி பெற 70 சதவீத வாய்ப்புள்ளது. இக்கூட்டணியை ஆதரித்து தேனி, போடியில் இருந்து மார்ச் 16 முதல் பிரசாரம் துவங்கவுள்ளேன்.இவ்வாறு அரசகுமார் கூறினார்.

No comments:

print