Tuesday, March 15, 2011

234 தொதியிலும் பகுஜன் சமாஜ் கட்சி போட்டி

உ.பி., முதல்வர் மாயாவதி தலைமையிலான பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் கடந்த, 2009 ல், நடந்த லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் தனித்து களமிறங்கியது. வரும் சட்டசபை தேர்தலில் பலத்தை நிரூபிக்க அக்கட்சி, 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளது. இது குறித்து அறிவிப்பை இன்று முறைப்படி வெளிவர உள்ளது. அப்போது முதற்கட்ட வேட்பாளர் பட்டியலும் வெளியாகும் வாய்ப்புள்ளது.

அக்கட்சி தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங், கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திட்டமிட்டு இருக்கிறார். பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, வேட்பாளர்களை ஆதரித்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

No comments:

print