திருநெல்வேலி : தி.மு.க., கூட்டணியில் இருக்கும் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் உயர் மட்டக்குழு கூட்டம், அக்கட்சியின் மாநில தலைவர் கரிக்கோல்ராஜ் தலைமையில் நெல்லையில் நடைபெற்றது. கூட்டத்தில் பெருந்ததலைவர் மக்கள் கட்சி சார்பில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்பட்டது. என்.ஆர். தனபாலன், பெருந்தலைவர் மக்கள் கட்சி சார்பில் போட்டியிடுவார் என கரிக்கோல்ராஜன் அறிவித்தார். பெருந்தலைவர் மக்கள் கட்சி உருவாக்கப்பட்டு 24 மணி நேரத்துக்குள் அதிலிருந்து தாவிய நடிகர் சரத்குமார், சமத்துவ மக்கள் கட்சி சார்பில் எந்த தொகுதியில் போட்டியிட்டாலும், அவரை தோற்கடிக்க பெருந்தலைவர் மக்கள் கட்சி முழுவீச்சில் செயல்படும் என தீர்மானம் நிறைவேற்றப்படுவதாக கரிக்கோல்ராஜன் தெரிவித்தார். அ.தி.மு.க., கூட்டணியில் ச.ம.க.,வுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment