Thursday, March 24, 2011

தேர்தல் துறவறம்: வைகோ விளக்கம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: ""ஆடுகள் மோதும் போது பின்வாங்குவது போல, இந்த தேர்தலில் ம.தி.மு.க., போட்டியிடாதது மீண்டும் போட்டியிடத்தான்,'' என அக்கட்சி பொதுச் செயலர் வைகோ, ஸ்ரீவில்லிபுத்தூரில் நடந்த திருமண விழாவில் பேசினார். அவர் மேலும் பேசியதாவது: ம.தி.மு.க., இலங்கைத் தமிழருக்காக மட்டும் போராடவில்லை. நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் தனியாருக்கு தாரை வார்க்க இருந்ததை தடுத்தது. முல்லை பெரியாறு அணைக்காக பல முறை போராடியது. நதிகள் இணைப்புக்காகவும், ஸ்டெர்லைட் தொழிற்சாலை மூடுவதற்காகவும் இன்று வரை போராடி வருகிறது. ம.தி.மு.க., சட்டசபைக்குள் நுழையக் கூடாதென்று, தனியார் நிறுவனம் பணம் செலவழித்து வருகிறது என பத்திரிகைகள் தெரிவிக்கின்றன. இந்த தேர்தலை மட்டும் தான் புறக்கணிப்போம் என்று கூறியுள்ளேன். ஆடுகள் மோதும் போது பின்வாங்குவது போல், ம.தி.மு.க., போட்டியிடாமல் உள்ளது மீண்டும் போட்டியிடத்தான். இவ்வாறு வைகோ பேசினார்.

No comments:

print