Friday, March 11, 2011
தி.மு.க., கூட்டணியில் இருந்து புரட்சி பாரதம் விலகல்
சென்னை: புரட்சி பாரதம் கட்சி, தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகி விட்டதாகவும்,தேர்தலில் 63 தொகுதிகளில் தனித்து போட்டியிட போவதாகவும் தெரிவித்துள்ளது. இது குறித்து சென்னையில் புரட்சி பாரதம் கட்சியின் மாநில துணை பொதுச்செயலர்கள் காமராஜ், சிவஞானம், மாநில செயலர் வின்சென்ட் ஆகி÷ யார் சென்னையில், நேற்று நிருபர்கள் சந்திப்பில் கூறியதாவது:கடந்த 2004ம் ஆண்டு பார்லி., தேர்தலில் தி.மு.க.,வுக்கு புரட்சி பாரதம் கட்சி ஆதரவு தெரிவித்தது. பிறகு நடந்த சட்டசபை தேர்தலில் அரக்கோணம் தொகுதி எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டு, ஜெகன்மூர்த்தி வெற்றி பெற்றார். ஏழு ஆண்டுகள் தி.மு.க.,வில் இருந்தோம். எந்த பிரச்னையும் ஏற்படாமல் நடந்து கொண்டோம். கடந்த பார்லி., தேர்தலின் போது எங்கள் கட்சிக்கு சீட் தரப்படவில்லை. சட்டசபை தேர்தலில் கூடுதல் இடங்கள் தருவதாக கருணாநிதியும், ஸ்டாலினும் தெரிவித்தனர். சமீபத்தில் தி.மு.க.,விடன் எங்கள் கட்சிக்கு "சீட்' குறித்து நடந்த பேச்சு வார்த்தையில் ஒரு இடம் தருவதாகவும், அதுவும் எந்த இடம் என்று பிறகு தெரிவிப்பதாகவும் கூறிவிட்டனர். கூட்டணியில் எங்கள் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் தரப்படாததால், நாங்கள் தி.மு.க., கூட்டணியிலிருந்து விலகிவிட்டோம். எங்களுக்கு சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கூடுதல் செல்வாக்கு உள்ளது. தமிழகம் முழுவதும் நாங்கள் 63 தொகுதிகளில் போட்டியிட உள்ளோம்.இவ்வாறு மூவரும் கூறினர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment