கடலூர் : கடலூர் தொகுதி தி.மு.க., எம்.எல்.ஏ., அய்யப்பனுக்கு போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால் ஆத்திரமடைந்த அவரது ஆதரவாளர்கள், கட்சிக் கொடிக் கம்பங்களை வெட்டி சாய்த்தனர்; கட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். கடலூர் தொகுதியில் சிட்டிங் எம்.எல்.ஏ.,வாக உள்ளவர் அய்யப்பன். வரும் தேர்தலில் மீண்டும் கடலூர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு விருப்ப மனு கொடுத்திருந்தார். இந்நிலையில், தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் கடலூர் தொகுதிக்கு, முன்னாள் எம்.எல்.ஏ., புகழேந்தியின் பெயர் அறிவிக்கப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள் நேற்றிரவு 7 மணிக்கு, கடலூர் - நெல்லிக்குப்பம் சாலையில் இருந்த ஐந்து தி.மு.க., கொடிக் கம்பங்களையும், கல்வெட்டுகளையும் உடைத்து சேதப்படுத்தினர். அரசு மருத்துவமனை எதிரில் வில்வ நகர் சாலையில் இருந்த அண்ணா துரை சிலையின் கண்ணை கறுப்புத் துணியால் கட்டினர்.
இதற்கிடையே கடலூர், செம்மண்டலம் தவுலத் நகரில் உள்ள அய்யப்பன் எம்.எல்.ஏ., வீட்டின் முன் திரண்ட அவரது ஆதரவாளர்கள், தலைமைக்கு எதிராக கோஷமிட்டனர். பின்னர் அவர்களுக்குள் கூடி ஆலோசனை செய்தனர். அதில், கட்சி மற்றும் கவுன்சிலர் பதவிகளை ராஜினாமா செய்வது எனவும், அய்யப்பன் எம்.எல்.ஏ.,வை சுயேச்சையாக போட்டியிட வலியுறுத்தவும் முடிவு செய்துள்ளனர். அதன்படி இன்று காலை அனைவரும் நகரச் செயலர் தங்கராசுவிடம் ராஜினாமா கடிதத்தை கொடுப்பது என முடிவு செய்தனர்.
இந்நிலையில், இரவு 8.30 மணிக்கு கடலூர் தேவனாம்பட்டினத்தைச் சேர்ந்த எம்.எல்.ஏ., ஆதரவாளர்கள், பாரதி சாலையில் உள்ள "கலைஞர் அறிவாலயம்' அலுவலகத்தை அடித்து நொறுக்கினர். அய்யப்பன் எம்.எல்.ஏ., ஆதரவாளர்களின் அதிரடி நடவடிக்கையால், கடலூர் தொகுதி தி.மு.க.,வினரிடையே பெரும் கலக்கம் ஏற்பட்டுள்ளது.

No comments:
Post a Comment