தூத்துக்குடி : உரிய ஆவணங்கள் உள்ளவர்களின் பணம் எந்த காரணம் கொண்டும் பறிமுதல் செய்யப்படமாட்டாது. சரியான ஆவணம் இல்லாமல் கொண்டு சென்றால் தான் சோதனையில் பறிமுதல் செய்யப்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் மகேஷ்வரன் தெரிவித்தார்.தூத்துக்குடி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதி தேர்தல் ஏற்பாடுகள் வேகமாக நடந்து வருகிறது. சட்டசபை தொகுதியில் பதிவாகும் ஓட்டுக்கள் அனைத்தும் தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக்கில் எண்ணப்படுகிறது. இதற்காக பாலிடெக்னிக்கில் பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.எந்தெந்த இடங்களில் தடுப்பு கம்புகள் அமைக்க வேண்டும். இ.வி.எம் பாக்ஸ் வைக்கப்பட்டுள்ள இடம், எங்கிருந்து பெட்டிகளை கொண்டு வரவேண்டும். அதற்காக அறைகளில் எந்த அளவு மாற்றம் செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் ஓட்டு எண்ணும் பாலிடெக்னிக் கல்லூரியை நேற்று மாவ ட்ட தேர்தல் அதிகாரி கலெ க்டர் மகேஷ்வரன் ஆய்வு செய்தார். மாவட்ட போ லீஸ் எஸ்.பி செந்தில்வேலன், டி.ஆர்.ஓ துரை. ரவிச்சந்திரன், சப்கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான், விளாத்திகுளம் தேர்தல் அதிகாரி ப ஷீர், தாசில்தார் சாமுவேல், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ஆசைத்தம்பி, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.ஓட்டு எண்ணும் 6 தொகுதிக்குரிய இடங்களையும் ஆய்வு செய்தனர். குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்வது உள்ளிட்ட பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்தனர். இதற்காக தயார் செய்யப்பட்ட வரைபடத்தின் மூலம் என்னென்ன பணிகள் செய்ய உள்ளோம் என்பதை கலெக்டர் ஆய்வு செய்தார். சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக அங்கு ஆய்வு நடந்தது. பின்னர் கலெக்டர் மகேஷ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது;தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டசபை தொகுதியில் மொத்தம் ஆயிரத்து 259 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படுகிறது. வாக்குச்சாவடிகளில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் அனைத்தும் நடந்து வருகிறது. வாக்குப்பதிவு அன்று பயன்படுத்துவதற்கு தேவையான எலக்டிரானிக் ஓட்டுப்பதிவு இயந்திரம் தயார் நிலையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.மொத்தம் இ.வி.எம்மில் ஆயிரத்து 609 கண்ட்ரோல் யூனிட்டும், 2 ஆயிரத்து 258 பேலட் யூனிட்டும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் புதியதாக ஆட்களை சேர்த்து முறைகேடு செய்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.மாவட்டத்தில் மொத்தம் 432 பதட்டமான வாக்குச்சாவடிகள் உள்ளன. இந்த வாக்குச்சாவடிகள் ஓட்டுப்பதிவு துவங்குவது முதல் முடியும் வரை முழுமையாக வீடியோவில் பதிவு செய்யப்படும். இதற்காக 450 லேப்டாப்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. சிற ப்பு பறக்கும் படை மூலம் மாவட்டத்தில் தொடர்ந்து வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சந்தேகத்திற்கு இடமாக கொண்டு செல்லப்படும் பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. முறையான ஆவணங்களுடன் செல்லும் பணத்தை பிடிப்பதில்லை. ஆவணம் இல்லாமல் பிடிபட்ட பணத்திற்குரிய ஆவணத்தை கொண்டு வந்து ஒப்படைத்தாலும் பணத்தை திரும்ப வழங்கி விடுகிறோம்.முறையாக ஆவணத்துடன் சென்றால் எந்த பணமும் பிடிக்கப்படவில்லை. தேர்தலில் கட்டாயம் வாக்களிக்க வேண்டும். பணம் வாங்க கூடாது உள்ளிட்ட விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறு கலெக்டர் தெ ரிவித்தார். எஸ்.பி செந்தில்வேலன் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குப் பெட்டிகள் அமைக்கும் இடத்தில் ஒரு தொகுதிக்கு 15 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவர். அதோடு பாலிடெக்னிக்கை சுற்றிலும் கூடுதலாக போ லீஸ் பாதுகாப்பு போடப்படும் என்றார்.
No comments:
Post a Comment