Friday, March 4, 2011

முதல்வர் கருணாநிதி குறித்த விபரங்களுக்கு அரசு இணையதளத்தில் தடை

சென்னை: முதல்வர் கருணாநிதி, அமைச்சர்கள், மாநகர மேயர்கள் குறித்த விவரங்கள், தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அரசு இணையதளத்தில் வெளியிட தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது.தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் தெரிவித்தார். தமிழக சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் தேர்தல் ஆணையம் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்க தொடங்கியுள்ளது. இதுவரை இல்லாத அளவுக்கு முதல் முறையாக தமிழக அரசின் இணையதளத்தில் முதல்வர், அமைச்சர்கள், மாநகர மேயர்கள் குறித்த விவரங்கள் முடக்கப்பட்டுள்ளன. முதல்வர், அமைச்சர்கள், மேயர்கள் ஆகியோரின் தொலைபேசி எண்களைக் கூட காண முடியவில்லை. பிரவீன் குமார் அறையில் வைக்கப்பட்டிருந்த முதல்வர் கருணாநிதியின் படத்தையும் அகற்றியுள்ளனர். தலைமைத் தேர்தல் அதிகாரியின் அலுவலக வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த அரசின் திட்டங்கள் குறித்த அறிவிப்புகள், விளம்பரப் பலகைகளையும் கூட எடுத்து விட்டனர். தீவுத் திடலில் நடந்து வரும் பொருட்காட்சியில் வைக்கப்பட்டிருந்த முதல்வரின் படங்களையும் கூட எடுத்துள்ளனர்.

No comments:

print