Monday, March 14, 2011

பேனர் அகற்றுவதில் பாரபட்சம் அ.தி.மு.க., மாணவரணி புகார்

சேலம்: "சேலம் நகரில் பேனர்கள் அகற்றுவதில், மாவட்ட நிர்வாகம் பாரபட்சம் காட்டி வருகிறது' என, அ.தி.மு.க., மாணவரணியினர் புகார் தெரிவித்துள்ளனர். சேலம் டி.ஆர்.ஓ., பழனிச்சாமியிடம் அ.தி.மு.க., மாவட்ட மாணவரணி செயலாளர் சக்திவேல் தலைமையில் நிர்வாகிகள் அளித்துள்ள புகார் மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: தேர்தலையொட்டி நன்னடத்தை விதிகளின் கீழ், அனைத்து கட்சிகளின் சுவர் விளம்பரங்கள், சுவரொட்டிகள், பேனர்கள் ஆகியவற்றை மாவட்ட நிர்வாகம் அப்புறப்படுத்தி வருகிறது. ஆனால், தி.மு.க.,வின் சுவர் விளம்பரங்கள், பேனர்கள் ஆகியவற்றை அகற்றுவதில் மட்டும் அதிகாரிகள் மெத்தனம் காட்டி வருகின்றனர். திருச்சி மெயின் ரோடு சந்திரமஹால் திருமண மண்டபம் அருகே உள்ள சுவர் விளம்பரங்களும், கூட்டுறவு சங்கங்களின் ரேஷன்கடைகளில் உள்ள தி.மு.க., தலைவர் கருணாநிதியின் படத்தோடு, ஒரு கிலோ அரிசி திட்டத்துக்கான விளம்பர தட்டிகள் என, அகற்றப்படாமல் உள்ளன. தேர்தல் நன்னடத்தை விதிகளின் படி அனைத்து கட்சியின் பேனர்களையும் பாரபட்சம் இல்லாமல் அகற்ற வேண்டும். இவ்வாறு அவர்கள் அளித்துள்ளனர்.

No comments:

print