சென்னை: திருவாரூரில் போட்டியிடுவது குறித்து கருணாநிதி விளக்கமளித்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "குளித்தலையில் போட்டியிடும் போதே திருவாரூரில் போட்டியிடும் எண்ணம் எனக்கு இருந்தது. ஆனால், அன்றைய அரசியல் தலைவர்கள் நான் போட்டியிடுவதை தடை செய்வதற்காக, திருவாரூர் தொகுதியை தனித் தொகுதியாக்கி, நான் போட்டியிடுவதை தடுத்து விட்டனர். இப்போது திருவாரூர் தொகுதி நான் போட்டியிடுவதற்கு ஏதுவாக மாறிவிட்டது. தனிப்பெரும்பான்மை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் 119 தொகுதிகளில் தி.மு.க., போட்டியிடுகிறது. தி.மு.க.,வின் தேர்தல் அறிக்கை 19ம் தேதி வெளியிடப்படுகிறது. கடந்த தேர்தலில், கதாநாயகனாக இருந்த தேர்தல் அறிக்கை, இந்த தேர்தலில் கதாநாயகியாக இருக்கும்.
ஈ.வெ.ரா.,வின் கொள்கையையும், அண்ணாதுரையின் அரசியல் பண்பாட்டையும் கொண்டு தேர்தல் யுத்தத்தில் தி.மு.க.,வின் வேட்பாளர்கள் களம் இறங்குகின்றனர். அ.தி.மு.க., அணியில் உருவாகியுள்ள சிக்கல்களை கண்டு நான் மகிழ்பவன் அல்ல. பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீடு பார்லிமென்டில் சட்டமாக நிறைவேறும் போது, வேட்பாளர்களிலும் 33 சதவீத பெண்கள் நிறுத்தப்படுவார்கள். தற்போதைக்கு தமிழகத்தில் பெண்களுக்கென 33 சதவீத இட ஒதுக்கீட்டை கொள்கையாக கொண்டு வாய்ப்பளித்து வருகிறோம். இவ்வாறு கருணாநிதி தெரிவித்தார்.
ஜெயலலிதாவை எதிர்த்து ஆனந்த்: அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை எதிர்த்து, ஸ்ரீரங்கம் தொகுதியில் தி.மு.க., சார்பில் ஆனந்த் போட்டியிடுகிறார். தமிழக சட்டசபை தேர்தலில் போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர்கள் பட்டியலை, முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்டார். இவர்களில் புதுமுகங்கள் 58 பேர், பெண்கள் 11 பேர், பட்டதாரிகள் 70 பேர், வக்கீல்கள் 26 பேர், டாக்டர்கள் 3 பேர், முதுகலை பட்டம் பெற்றவர்கள் 27 பேர். முதல்வர் கருணாநிதி, திருவாரூர் தொகுதியில் போட்டியிடுகிறார். ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியிலும், நிதி அமைச்சர் அன்பழகன் வில்லிவாக்கம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தி.மு.க., வேட்பாளர் பட்டியலில் கோ.சி.மணி, ஆற்காடு வீராசாமி ஆகியோர் இடம் பெறவில்லை. அ.தி.மு.க.,வில் இருந்து தி.மு.க.,விற்கு தாவிய சேகர்பாபு, முத்துசாமி, ரகுபதி, ம.தி.மு.க.,வில் இருந்து தாவிய மு.கண்ணப்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து தி.மு.க.,விற்கு தாவிய கோவிந்தசாமி ஆகியோர் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.
முன்னாள் மத்திய அமைச்சர் என்.வி.என்.சோமுவின் மகள் கனிமொழி, வீரபாண்டி ஆறுமுகத்திற்கும், அவரது மகன் ராஜேந்திரன் ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. நெல்லையில் முன்னாள் எம்.எல்.ஏ.,வும், தற்போதைய மேயருமான ஏ.எல்.சுப்ரமணியத்தின் மகன் லட்சுமணனுக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க., பொதுச் செயலர் ஜெயலலிதாவை எதிர்த்து, தி.மு.க., சார்பில் ஸ்ரீரங்கம் தொகுதியில் ஆனந்த் என்பவர் நிறுத்தப்பட்டுள்ளார். திருவாரூரில் போட்டியிடும் முதல்வர் கருணாநிதி வரும் 23ம் தேதி, கூட்டணி கட்சித் தலைவர்களுடன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பிரசாரத்தை துவக்குகிறார். 24ம் தேதி திருவாரூரில் வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.

No comments:
Post a Comment