சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து ஒரிரு நாளில் பேசி தீர்க்கப்படும் என இந்திய மார்க்., கம்யூ., நிர்வாகிகளில் ஒருவரான மகேந்திரன் கூறினார். அ.தி.மு.க,. தலைமை கழக ஆபீசில் நிர்வாகிகளுடன் நடத்திய பேச்சு வார்த்தைக்கு பின்னர் நிருபர்களிடம் பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்; தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. மிக விரைவில் பேசி முடித்து உடன்பாடு ஏற்படும் இவ்வாறு கூறினார்.
அ.தி.மு.க.,வின் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் வரும் பட்சத்தில் அதிருப்தியின் காரணமாக டென்ஷனில் இருக்கும் கட்சிகள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 3 வது அணி உருவாகாமல் தடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக நடந்த ரகசிய பேச்சுக்கு பின்னர் அ.தி.மு.க., தலைமை செயலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி சுமுக முடிவு எடுக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இடதுசாரி தலைவர்கள், அ.தி.மு.க., தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டு வந்தனர்.
தே,மு.தி.க,. சார்பில் பன்ருட்டி ராமச்சந்திரன் , சுதீஷ் ஆகியோரும் வரவுள்ளனர். இங்கு மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசப்படுகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக இன்று அனைத்து தலைவர்களும் சந்தித்து பேசுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ, தா.பாணடியன், ஜி.ராமகிருஷ்ணன் யாரும், யாரையும் சந்திக்கவில்லை. இவர்களின் கட்சி ஆபீசில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் ஏமாந்து திரும்பினர்.
ரகசியமாக முக்கியப்புள்ளிகள் பிரச்னைகளை சமாளிக்க சமரச பேச்சில ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., தலைமை செயலகத்தில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் மகேந்திரன் அ.தி.மு.க,. நிர்வாகிகளுடன் கலந்து பேசினர். இன்று இரவுக்குள் ஒரு சுமுக உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொகுதி தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்னை குறித்து பேசித்தீர்க்க 5 பேரை கொண்ட ஒரு குழுவை அமைக்கலாம் என்ற யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் படி முடிவுகள் மாற்றி எடுக்கலாம் என கட்சி மூத்த நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க.,வின் வேட்பாளர் பட்டியலில் மாற்றம் வரும் பட்சத்தில் அதிருப்தியின் காரணமாக டென்ஷனில் இருக்கும் கட்சிகள் தங்கள் நிலையை மாற்றிக்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்துடன் 3 வது அணி உருவாகாமல் தடுக்க முடியும் என்ற முடிவுக்கு வந்துள்ளனர். முன்னதாக நடந்த ரகசிய பேச்சுக்கு பின்னர் அ.தி.மு.க., தலைமை செயலகத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி சுமுக முடிவு எடுக்க தற்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இடதுசாரி தலைவர்கள், அ.தி.மு.க., தலைமை செயலகம் நோக்கி புறப்பட்டு வந்தனர்.
தே,மு.தி.க,. சார்பில் பன்ருட்டி ராமச்சந்திரன் , சுதீஷ் ஆகியோரும் வரவுள்ளனர். இங்கு மூத்த நிர்வாகிகளுடன் கலந்து பேசப்படுகிறது.
அ.தி.மு.க., கூட்டணியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக இன்று அனைத்து தலைவர்களும் சந்தித்து பேசுவர் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெயலலிதா, விஜயகாந்த், வைகோ, தா.பாணடியன், ஜி.ராமகிருஷ்ணன் யாரும், யாரையும் சந்திக்கவில்லை. இவர்களின் கட்சி ஆபீசில் காத்திருந்த பத்திரிகையாளர்கள் ஏமாந்து திரும்பினர்.
ரகசியமாக முக்கியப்புள்ளிகள் பிரச்னைகளை சமாளிக்க சமரச பேச்சில ஈடுபட்டனர். தொடர்ந்து அ.தி.மு.க., தலைமை செயலகத்தில் இந்திய கம்யூ., கட்சி சார்பில் மகேந்திரன் அ.தி.மு.க,. நிர்வாகிகளுடன் கலந்து பேசினர். இன்று இரவுக்குள் ஒரு சுமுக உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேட்பாளர் பட்டியல் மறுபரிசீலனை : பொதுவாக 3 வது அணி உருவாக இடதுசாரி கட்சியினர் விரும்பவில்லை என்றே தெரிகிறது. இது தொடர்பாக நிருபர்களிடம் பேசிய இ.கம்யூ., மாநில செயலர் தா. பாண்டியன் கூறுகையில்: அ.தி.மு.க., அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியலை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தொடர்பாக அ.தி.மு.க., தலைமை பிரதிநிதிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெறும் என்றார்.
தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் அ.தி.மு.க., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தலைவர்கள் அனைவரும், நேற்று இரவு வரை, தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தினர். மூன்றாவது அணி அமைத்தால், அது, தி.மு.க., வெற்றி பெற வழிவகுக்கும் என்பதால், அந்த முடிவை எடுக்க, தலைவர்கள் அனைவருமே தயங்கினர். இதற்கிடையே, அ.தி.மு.க., தரப்பில் இருந்தும், கூட்டணி கட்சித் தலைவர்களிடம், பேச்சு வார்த்தை துவங்கியது.
தே.மு.தி.க., - மார்க்சிஸ்ட் - இந்திய கம்யூ., கேட்கும் தொகுதிகளை தருவதற்கு, அ.தி.மு.க., இறங்கி வந்தது. ம.தி.மு.க.,வுக்கான தொகுதி ஒதுக்கீடு குறித்தும், பேச்சு வார்த்தை துவங்கியது. ம.தி.மு.க.,வுக்கு 13 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா சீட் ஒதுக்குவதற்கும் பேச்சு வார்த்தை நடந்தது. புதிய தமிழகம் கேட்ட, ஒட்டப்பிடாரம், வால்பாறை ஆகிய தொகுதிகளை தரவும், அ.தி.மு.க., தரப்பில் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. சரத்குமார் கேட்ட, தென்காசி, நான்குநேரி தொகுதிகளை ஒதுக்கவும், சம்மதம் தெரிவிக்கப்பட்டது.
இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகளும், வெற்றி பெற்ற தொகுதிகளை தருவதற்கும், அ.தி.மு.க., இறங்கி வந்தது. தே.மு.தி.க.,வுக்கு அண்ணாநகர், விருகம்பாக்கம் தொகுதிகளை ஒதுக்கவும் சம்மதம் தெரிவிக்கப்பட்டது. அ.தி.மு.க., நேற்று இறங்கி வந்து, பேச்சு வார்த்தை நடத்தி, சுமூக சூழ்நிலையை உருவாக்கியதை அடுத்து, மூன்றாவது அணி முயற்சி நேற்றிரவு முடிவுக்கு வந்தது. இன்று, இரவுக்குள் ஜெயலலிதா முன்னிலையில், கூட்டணி கட்சிகளுக்கு, அவர்கள் விரும்பியபடி, தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்று அ.தி.மு.க., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment