Thursday, April 28, 2011

கிருஷ்ணகிரியில் வாக்கு எண்ணும் மையத்தில் 10 அடி நீள பாம்பு புகுந்தது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையத்தில் 10 அடி நீள நல்லபாம்பு புகுந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. வனத்துறையினர் அந்த பாம்பை பிடித்து காட்டுப்பகுதியில் விட்டனர்.


கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 6 தொகுதிகளில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் அனைத்தும் 4 அடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரியி்ல் வைக்கப்பட்டுள்ளது. கோடை மழையால் இந்த மையத்தில் விஷப்பாம்புகள் வரத்து அதிகரித்துள்ளது.

கடந்த திங்கட்கிழமை தான் 9 அடி நீள கட்டுவிரியான் பாம்பு இந்த மையத்திற்குள் நுழைந்தது. அதை மத்திய பாதுகாப்பு படையினர் பிடித்துக் கொண்டுபோய் காட்டு்ப்பகுதியில் விட்டனர்.

இந்நிலையில் இந்த மையத்தை பார்வையிட மாவட்ட கலெக்டர் வந்தார். அவர் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் ஓசூர் தொகுதி எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தில் 10 அடி நீள நல்லபாம்பு படம் எடுத்து நின்றது. அதை பாதுகாப்பு பணியில் இருந்த ஒரு வீரர் இரும்பு குழாயக்குள் போகவிட்டு இரு புறத்தையும் கட்டிவிட்டார். பின்னர் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் வந்து பாம்பை வனப்பகுதியில் கொண்டுபோய் விட்டனர்.

No comments:

print