சேலம்: ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் கருதுகிறார்கள் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார்.
சேலம் மாவட்டத்தில் திமுக கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரசாரம் செய்ய வந்த ராமதாஸ் நிருபர்களிடம் பேசுகையில்,
இந்த தேர்தலில் திமுக அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. நான் தேர்தல் பிரசாரம் செய்வதற்காக தமிழ்நாடு முழுவதும் உள்ள 30 மாவட்டங்களுக்கும் சென்று வந்துள்ளேன். மக்கள் மனதில் அரசுக்கு ஆதரவான அலை வீசுகிறது. மக்களின் மகத்தான ஆதரவு ஒரு புறம், கூட்டணி கட்சிகளின் பலம் மற்றொரு புறம் என இரண்டும் சேர்ந்து திமுக கூட்டணிக்கு வெற்றியைத் தேடித் தரும்.
திமுக கூட்டணியில், பா.ம.க, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, பெருந்தலைவர் மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி என வாக்கு வங்கி கொண்ட கட்சிகள் இணைந்துள்ளன.
அதிமுக கூட்டணியில் அ.தி.மு.க.வைத் தவிர வேறு எந்த கட்சிக்கும் ஒரே சீரான வாக்கு வங்கி இல்லை. அந்த கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவம். அந்தக் கூட்டணியில் உள்ள விஜயகாந்த் கட்சி, ஆரம்பத்தில் 2 திராவிட கட்சிகளுக்கும் மாற்று என்ற ரீதியில் தன்னை முன்னிலைப்படுத்தி 2 தேர்தலை சந்தித்தது. அதனால் அந்த கட்சிக்கு குறிப்பிட்ட சதவீத ஓட்டுகள் கிடைத்தது.
ஆனால் விஜயகாந்த் தற்போது அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதால் அவர் பத்தோடு பதினொன்றாகிவிட்டார். எனவே இந்தத் தேர்தலில் அவருடைய கட்சி வாக்கு வங்கி குறைந்து விடும். அவருடைய கட்சி தொண்டர்களே அவருக்கு ஓட்டு போட மாட்டார்கள்.
இந்திய தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் மிகவும் பாரபட்சமாக உள்ளது. தமிழ்நாட்டில் மினி எமர்ஜென்சி நடைபெறுகிறது என்று சொல்லக்கூடிய அளவுக்கு தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் 100 சதவீதம் ஒரு தலைப்பட்சமாக உள்ளது. தேர்தல் நேரத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரிகள் மட்டும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டில் இருப்பார்கள். ஆனால் இந்த முறை மாநில அரசின் நிர்வாகத்தையே தேர்தல் ஆணையம் தன் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொண்டது. இது ஜனநாயகத்துக்கே ஆபத்தாகும்.
மதுரை மாவட்ட கலெக்டர் சகாயம், மத்திய மந்திரி மீது பொய் வழக்கு போடச் சொல்லி மிரட்டுகிறார் என்று தொகுதி தேர்தல் நடத்தும் அதிகாரி புகார் தெரிவித்து உள்ளார். தேர்தல் ஆணையத்துக்கும் புகாரை அனுப்பி உள்ளார். தேர்தல் ஆணையம் கலெக்டர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக புகார் தெரிவித்த தேர்தல் அதிகாரி சுகுமாறன் மீது நடவடிக்கை எடுத்து உள்ளது. இப்போது அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
இந்த தேர்தலை பொறுத்தவரை ஜெயலலிதா ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது என்று பெரும்பான்மையான வாக்காளர்கள் கருதுகிறார்கள். 2001 முதல் 2006ம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில் அனைத்து தரப்பு மக்களும் சந்தித்த கொடுமைகள் மாறாத வடுக்களாக வாக்காளர்கள் மனதில் பதிந்துள்ளன.
தமிழ்நாட்டு மக்கள் ஆட்சி மாற்றத்தை கொடுக்க தயாராக இல்லை. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று மக்கள் விரும்புவதாக சில ஊடகங்கள்தான் பொய்யை பரப்பி வருகின்றன. ஆட்சி மாற்றம் வேண்டும் என்று விரும்பும் அளவுக்கு திமுக மீது எந்த வெறுப்பும் இல்லை.
தமிழ் பெண்களின் கற்பை பற்றி இழிவு படுத்தி கூறிய நடிகை குஷ்பு, திமுக-பாமக வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார் என்பது வேறு. அந்தப் பிரச்சனைபற்றி இப்போதும் வழக்கு நடந்து வருகிறது. மேலும் பிரச்சனை நடந்த நேரத்தில், தான் அவ்வாறு கூறவில்லை என்று குஷ்பு மறுத்தும் உள்ளார் என்றார்.
பெண்களுக்கு ஒதுக்கீடு கோரி போராட்டம் நடத்தும் பாமகவில், தேர்தலில் பெண்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது ஏன்? என்று கேட்டதற்கு, தேர்தலில் போட்டியிட பெண்கள் யாரும் விரும்பவில்லை. மேலும், அவர்கள் போட்டியிடுவதற்கு, அவர்களின் கணவன்கள் அனுமதி மறுத்து விட்டனர் என்றார்.
காங்கிரசுடன் சீட் ஒதுக்கீடு பேரத்தில் ஏற்பட்ட மோதலால்,
மத்திய அமைச்சர் பதவிகளை ராஜினாமா செய்து விடுவதாக திமுக மிரட்டியது. ஆனால், இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட போது இந்த ஆயுதத்தை திமுக கையில் எடுக்கவில்லையே ஏன் என்ற கேள்விக்கு, ராமதாஸ் பதில் அளிக்க முடியாமல் திணறினார்.
அது வந்து.. அதாவது என்றவர்.. கடைசி வரை பதில் கூறிவில்லை.

No comments:
Post a Comment