திருக்கழுக்குன்றம்: போதையில் விஜயகாந்த் அடித்து விடுவார் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா பயப்படுவதாக பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி கூறினார்.
செய்யூர் தொகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் பார்வேந்தனை ஆதரித்து, கல்பாக்கம் அருகே அவர் பிரச்சாரம் செய்து பேசுகையில்,
செய்யூரில் போட்டியிடும் பார்வேந்தன் வெற்றி பெற்றால், கருணாநிதி 6 வது முறையாக அரியணை ஏறுவார். நமது கூட்டணி சமத்துவ கூட்டணி, சமூகநீதி கூட்டணி, பலமான கூட்டணி. அதிமுக கூட்டணி சினிமா கூட்டணி, கோடம்பாக்கம் கூட்டணி, கொள்கை இல்லாத கூட்டணி.
முதல்முறையாக பாமகவும், விடுதலை சிறுத்தைகளும் இணைந்து களம் காண்கிறது. சிங்கமும், சிறுத்தையும் இணைந்த இந்த கூட்டணி, நிச்சயம் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை தேடித்தரும்.
ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் இதுவரை ஒரே மேடையில் பிரசாரம் செய்யவில்லை. இதற்கு காரணம், போதையில் விஜயகாந்த் அடித்து விடுவார் என்று ஜெயலலிதா பயப்படுகிறார் என்றார்.
அ, ஆ தெரியாத விஜயகாந்த்-ராமதாஸ்:
இந் நிலையில்
திட்டக்குடி தொகுதி விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் சிந்தனைச்செல்வனை ஆதரித்து பேசிய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்,
பா.ம.கவும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். தமிழகத்தில், இரு மாவட்டங்களைத் தவிர, மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பிரசாரத்திற்கு சென்று வந்துள்ளேன். தொகுதியில் யாரைக் கேட்டாலும் கலைஞருக்குத் தான் ஓட்டு என்கின்றனர். ஏன் என்று கேட்டால் எங்களுக்கு மூன்று வேளை சோறு போட்டவர் அவர் தான் என்கின்றனர்.
கலைஞர் உங்கள் பிள்ளைகளை படிக்க வைக்க, அறிவை வளர்க்க, லேப் டாப் தருகிறேன் என்று சொன்னால், ஜெயலலிதா, வீட்டிற்கு 4 ஆடு, ஒரு மாடு தருகிறேன் என்கிறார்.
கொள்கையே இல்லாத நடிகர் கட்சித் தலைவர், மேடையில் பேசும்போது ஆடுகிறார், தள்ளாடுகிறார், தடுமாறுகிறார். தொண்டர்களை, 'ஆப்' அடிக்கச் சொல்கிறார். கட்சியில் உள்ள தொண்டர்கள் அனைவரும் நல்ல தம்பிகள் தான்.
அவர்களை திருத்தி தி.மு.க, பா.ம.க, விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளுக்கு கொண்டு வரவேண்டும். கோடம்பாக்கத்தில் இருந்து கோட்டைக்கு போவேன், கோட்டைக்கு போவேன் என அடம் பிடித்தவர், இன்று போயஸ் தோட்டத்திற்கு சென்று விட்டார். நடிகர் சொல்கிறார் நான் கதாநாயகனாக நடிக்கவில்லை என்றால், அண்ணனாக, அப்பாவாக நடிப்பேன் என்கிறார். நீ எதையாவது நடி, எங்காவது பம்பரம் விடு. உனக்கு அரசியலில் "அ, ஆ' தெரியாது என்றார்.

No comments:
Post a Comment