Sunday, April 3, 2011

அரசு ஊழியர்கள் 49 'ஓ' பயன்படுத்த முடியாது!.Govt staffs cannot use the 49 'O' forms in the assembly polls.

சென்னை: யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதைத் தெரிவிக்கும் 49ஓ வசதியை அரசு ஊழியர்கள் பயன்படுத்த முடியாது என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.


இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி ஆணையரும், தேர்தல் அதிகாரியுமான கார்த்திகேயன் கூறுகையில், அரசு ஊழியர்கள், 49ஓ விண்ணப்பத்தை பயன்படுத்த முடியாது. அவர்கள் தங்களது வாக்குகளை யாராவது ஒரு வேட்பாளருக்கு பதிவு செய்யலாம் என்றார்.

யாருக்கும் வாக்களிக்க விரும்பாதவர்கள், நான் யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்பதை 49ஓ விண்ணப்பத்தை வாங்கிப் பூர்த்தி செய்து வாக்குச் சாவடியில் தரலாம். இந்த விண்ணப்பப் பாரங்கள் வாக்குச் சாவடிகளில் வைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இந்த விதிமுறை, அரசு ஊழியர்களுக்குப் பொருந்தாது என்று தேர்தல் ஆணையம் விளக்கியுள்ளது

No comments:

print