Friday, April 29, 2011

வாக்கு எண்ணிக்கை பூத் வாரியாக எண்ணப்படும் : தேர்தல் அதிகாரி

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper
திருச்சி: வாக்கு எண்ணிக்கை முறையில் மாற்றம் இல்லை. பூத் வாரியாகவே எண்ணப்படும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் தெரிவித்தார்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் 8 மாவட்ட அலுவலர்களுக்கான பயிற்சி முகாம் நேற¢று நடந்தது. காலை 10 மணி முதல் 1 வரை திருவண்ணாமலை, கடலூர், கரூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டத்தினரும், மதியம் 2 மணி முதல் 5 மணி வரை திருச்சி, நாமக்கல், விழுப்புரம் மாவட்டத்தினரும் இப்பயிற்சியில் பங்கேற்றனர்.

இதில் கலந்து கொண்ட தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமார் நிருபர்களிடம் கூறியதாவது: வாக்கு எண்ணிக்கை மையங்களில் மே 13ம் தேதி கூடுதல் பாதுகாப்பு மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முக்கியமாக வெப் கேமரா மூலம் வாக்கு எண்ணிக்கை தொடர்பான அனைத்து விஷயங்களையும் பதிவு செய்கிறோம். வாக்கு எண்ணிக்கை முறையில் இந்த முறை எந்த மாற்றமும் கிடையாது. பூத் வாரியாகவே எண்ணப்படும். குலுக்கல் முறையில் எண்ணும் திட்டம் தற்போது இல்லை. இந்த திட்டம் பற்றி ஆய்வு செய்து வருகிறோம்.

போலீசார் குறைவான தபால் வாக்குகளை பதிவு செய்துள்ளதாக கூறுகின்றனர். தபால் ஓட்டு போடுவதற்கான படிவம் 12ஐ உயர் அதிகாரிகள் வாங்காமல் இருந்தால் அது தவறு. இதுதொடர்பாக அறிக்கை தருமாறு கேட்டுள்ளோம். தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வருவதற்கு முன்பே தேர்தல் தொடர்பான அனைத்து வழக்குகளிலும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய முயற்சித்து வருகிறோம். தேர்தல் வாக்கு எண்ணிக்கையன்று மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போட உள்ளோம். செல்போன், தீப்பெட்டி கொண்டு செல்ல அனுமதி கிடையாது. பத்திரிக்கையாளர்கள் அதிகமாக உள்ளதால் அவர்களை 4, 5 குழுக்களாக பிரித்து உள்ளே அனுப்ப முடிவு செய்துள்ளோம்.
இவ்வாறு பிரவீன்குமார் தெரிவித்தார்.

No comments:

print