Monday, April 11, 2011

12 வது முறை சட்டசபைக்கு அனுப்பி வையுங்கள்: கருணாநிதி பேச்சு

என்னை 12 வது முறையாக சட்டசபைக்கு அனுப்பி வையுங்கள் என்று இன்றைய பிரசாரத்தை இறுதி செய்த தி.மு.க.., தலைவரும், முதல்வருமான கருணாநிதி பேசினார். இன்று முழுவதும் திருவாரூரில் பிரசாரம் செய்து விட்டு மாலையில் நடந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசுகையில்; இந்த திருவாரூரில் கூட்டம், நிகழ்ச்சி என பல்வேறு முறை மேடையில் ஏறி பேசியிருக்கிறேன். நான் தற்போது மணவறøக்கு வந்த புதுப்பெண்ணாக உங்கள் முன்பு உட்கார்ந்திருக்கிறேன். தமிழகம் முழுவதும் நமது கூட்டணி வேட்பாளர்ளுக்கு ஆதரவு கேட்டு இன்று நான் எனக்கு ஆதரவு கேட்டு பேசுகிறேன். 1987 ல் நான் திருவாரூரில் போட்டியி ஆசைப்பட்டேன் ஆனால் அது தனித் தொகுதியாக இருந்ததால் போட்டியிட முடியவில்லை. நான் 11 முறை சென்னை, தஞ்சை உள்ளிட்ட பகுதிகளில் தேர்தலில் நின்று சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளேன்.
இப்போது மீண்டும் என்னை நீங்கள் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் 12 வது முறையாக சட்டசபைக்கு செல்லும் வாய்ப்பை பெறுவேன். 12 என்ற எண் மகாமகத்தை நினைவூட்டும். பகுத்தறிவு கொள்கைகளை யாரிடமும் நாங்கள் திணிப்பதில்லை. ஏரோட்டும் மக்கள் ஏங்கும் தேரோட்டம் வேண்டும் என திரூவாரூருக்கு குரல் கொடுத்தவன் நான் . கடவுளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா என்று கேட்டால் கடவுள் என்னை ஏற்றுக்கொள்கிறாரா , அந்த அளவிற்கு நான் நடந்து கொள்கிறேனா என்பது தான். திருக்குவளையில் பிறந்த எனது தந்தையார் நாத்திகள். இவரது பிள்ளையாக வளர்ந்த எனக்கு இசைத்துறையில் ஈடுபடுத்த எனது தந்தை விரும்பினார். நானும் 2 நாள் வகுப்புக்கு சென்றேன். 2 நாள் கழித்து ஒருவர் தெருவோடு போகும்போது எனது தந்தை எழுந்து நின்றும் , தோளில் இருந்த துண்டை இடுப்பில் கட்டி மரியாதை கொடுத்தார். இதனால் நான் நடுங்கிப்போனேன். இவர்கள் பெரியவர்கள், இவர்களுக்கு மரியாதை செலுத்த வேண்டும் என்றார் எனது தந்தை. எனக்கு இசை வேண்டாம், தேவையில்லை, தன்மானத்துடன் வாழ விரும்புகிறேன் .

சமுதாயத்தை கீழ்த்தரமாக்கும் தொழில் வேண்டாம் என்றேன். இசைத்தொழிலையும் விட்டு விட்டேன். நான் படிக்க வைக்கப்பட்டு தோல்வியுற்று பின்னர் வேலைபார்க்க சென்றேன். திராவிட இயக்கத்தில் தொண்டனாக இணைத்து கொண்டேன்.

No comments:

print