Sunday, April 3, 2011

5 ஆண்டு சாதனைகளை சொல்லி ஆதரவு கேட்கிறேன் நீங்கள் மறுத்தாலும் உங்களை மறக்க மாட்டேன் வேலூர் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி உருக்கம்

வேலூர்: வேலூர் கோட்டை மைதானத்தில் திமுக கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நேற்று இரவு நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் முதல்வர் கருணாநிதி பேசியதாவது: கடந்த 2, 3 நாட்களாக நம் அணி வேட்பாளர்களை

அறிமுகப்படுத்தும் கூட்டங்களில் கலந்துகொண்டு இன்று இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு சென்னை திரும்பி அடு¢த்த நாள் எனக்கென்று ஒரு தொகுதி உள்ளது அங்¢கு சென்று வாக்குகளை வழங்குங்கள் என்று கேட்டுக்கொண்டு 5ம் «¢ததி

சோனியாகாந்தியுடன் சென்னைப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று அதன்பின் என் தொகுதியில் தேர்தல் பணிகளை ஆற்ற வேண்டிய நிலையில் இருக்கிறேன். திமுக ஒரு சமுதாய இயக்கம். நீதிக் கட்சி சமூக நீதிக்காக போராடிய கட்சி. சமூக

நீதியிடமிருந்து பிறந்ததுதான் சுயமரியாதை இயக்கம் என்ற குழந்தை. அந்த குழந்தையை வளர்க்க அண்ணா பாடுபட்டார். அந்தப் பெரியாரிடம் பாடம் கற்றவன்தான் உங்கள் முன்பு இருக்கிற இந்த கருணாநிதி. பெரியாரின் வீட்டுப் பிள்ளைகள் பேரப்

பிள்ளைகளின் அன்பால் உந்தப்பட்டு அவரின் கொள்கைகளை தாங்கிக்கொண்டு இத்தனை ஆண்டுகளாக உள்ள ஒரு இயக்கத்தில் இருக்கிறார்களே என்று  எதை எதையெல்லாமோ சொல்லி இன்று யார் யாரோ  இந்த இயக்கத்தை புதுசாகக் கருதி

பொடிப்பொடியாக்கி விடுவோம், தூள் தூளாக்கிவிடுவோம் என்று கூறி வருகிறார்கள்.

இன்று மாலைகூட ஒரு பத்திரிகையில் அந்த அம்மையார் ஒரு உத்தரவு போட்டிருக்கிறார்கள். போலீஸ் அதிகாரிகளுக்கு ஒரு உத்தரவு கொடுக்கிறார் அழகிரியை கைது செய்ய வேண்டும் என்று உத்தரவு விடுத்துள்ளார். இன்றைக்கு தமிழகத்தில் ஒரு

அறிவிக்கப்படாத எமர்ஜென்சி நடந்துகொண்டிருக்கிறது. எமர்ஜென்சி என்றால் நெருக்கடி நிலை என்று உங்களுக்குத் தெரியும். வெளியே போனாலும் உத்தரவு பெற்றுச் செல்ல வேண்டும். திரும்ப வந்தாலும் உத்தரவு பெற்று வரவேண்டும்.
எனக்கே சந்தேகம். என்னுடைய நண்பர்கள் ஞானசேகரன் போன்றவர்கள் இதைப் புரிந்துகொள்ள வேண்டும். எனக்கே ஒரு சந்தேகம் எழுந்துள்ளது. என்னை நீங்கள் தேர்ந்தெடுத்து என்னை முதல்வராக்கியுள்ளீர்கள். நான் இப்போது முதலமைச்சரா,

இல்லையா என்ற சந்தேகம் உள்ளது தமிழ்நாட்டை திமுக ஆண்டுகொண்டிருக்கிறதா அல்லது தேர்தல் ஆணையம் ஆண்டுகொண்டிருக்கிறதா? தேர்தல் ஆணையத்தை நான் பழிக்க மாட்டேன், அதோடு மோதிக்கொள்ள விரும்பவில்லை. தேர்தல்

ஆணையம் நடுநிலையோடு செயல்பட்டால் அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள். குறைகூற மாட்டார்கள். கண்ணனுக்கு பால் கொடுத்த பூதகி போல, அந்த கண்ணனுக்கு பால் தருவது போல கண்ணனைக் கொல்ல முற்பட்டார் அப்போது தன்னைக்

காத்துக்கொள்ள கண்ணன் வேலையைச் செய்தது போல நானும் செய்தாக வேண்டும் என்ற சூழலில் நான் இருக்கிறேன். எல்லாம் சட்டப்படி நடக்கட்டும்;  எல்லாம் நியாயப்படி நடக்க வேண்டும்.

இதில் யாருக்கும் ஐயம் இல்லை. உனக்கு என்னவோ அதே எனக்கும், எனக்கு என்னவோ அதே உனக்கும். இந்த நடவடிக்கைக்கு யாருக்கும் அபிப்ராய பேதம்  இல்லை. ஆனால் தமிழகத்தில் எதிர்க்கட்சி அணிக்கு வெற்றி தேடி தர வேண்டும் என்று

சிலபேர், மன்னிக்க வேண்டும்... பூணுலை உருவிக் கொண்டு பாடுபடுகிறார்கள். கருணாநிதி ஆளக்கூடாது, ஏன்? அவர் ஏழை, எளியவர்கள் முகத்தில் சிரிப்பை காண்கிறார். அண்ணன் சொன்னதை செய்கிறார். அதனால் கூடாது என்கிறார்கள்.

அண்ணா ஒரு படி அரிசி ஒரு ரூபாய் கொடுப்பேன் என்றார். அவர்கூட செய்யாததை கருணாநிதி ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு போடுகிறார். அதுவும் இந்த தேர்தலில் பரம ஏழைகளுக்கு 35 கிலோ அரிசி இலவசமாக தருவதாக உறுதி

அளித்திருக்கிறார். கேரளத்தில் மாவளி என்ற ஒரு மன்னர் இருந்தார். அவர் மக்களுக்கு நன்மை செய்து கொண்டே இருப்பார். ஏழை, எளியவர்களுக்கு அந்த மன்னர் தொடர்ந்து நல்லது செய்து கொண்டே இருந்தார். அவர் இருக்கும் இடத்தை பிடிக்க

முடியவில்லையே என்று தேவர்கள் எண்ணினார்கள்.  எப்படி மாவளியை வீழ்த்துவது என்று யோசித்து சூழச்சி செய்து வீழ்த்தியும் விட்டனர். சாகும்போது,  3 அடி மண் தர சம்மதம் என்று கூறினேன் என்றார் மன்னர். இல்லை, நீ இருந்தால்

ஏழைகளுக்கு தொடர்ந்து நன்மை செய்து கொண்டு இருப்பாய். ஆட்சி எங்களுக்கு கிடைக்காது என்றனர்.

இதையடுத்து மாவளி மன்னர் சாகும் நிலைக்கு வந்தபோது, தேவர்களிடம் ஒரே ஒரு வரம் வேண்டும் என்று, ‘அது ஆண்டுக்கு ஒருமுறை கேரளத்தில் ஆட்சிக்கு உட்பட்ட மக்களை சந்திக்க வாய்ப்பு தர வேண்டும்’ என்றார். சாவதுக்கு துணிந்து

விட்டான் என்று அவர் விரும்பி கேட்ட வரத்தை கொடுத்து, ஆண்டுக்கு ஒருமுறை கேரள மக்களை சந்தித்து அளவளாவிடலாம் என்று கூறினர். இதுதான் கேரளத்தில் கொண்டாடப்படும் ஓணம் பண்டிகையாகும். தமிழகத்திலுள்ள மலையாளிகளும்

கொண்டாடுகிறார்கள். அவர்களுக்காக விடுமுறையும் அறிவித்தோம். நல்லவன் ஒருவன் இருந்தால் நல்லாட்சி, நல்ல திட்டங்களை செய்தால் அதைப்பார்த்து ஒரு கூட்டம் பொறுத்துக் கொள்ளாது. அந்த இடத்தில் அமர வேண்டும் என்று என்பார்கள்.

அதான் மாவளி விவகாரத்தில் நடந்த நிகழச்சி. தமிழகத்தில் இந்த மாவளி மக்களுக்கு நல்லது செய்கிறான். இலவச அரிசி, இலவச தொலைக்காட்சி, இலவச சிகிச்சை, 108 இலவச ஆம்புலன்ஸ் திட்டம் என எத்தனையோ நல்ல திட்டங்களாக

செயல்படுத்தி வருகிறார். இவனை விட்டு வைத்தால் இன்னும் 1000 ஆண்டுக்கு நம்முடைய வம்சம் ஆட்சிக்கு வர முடியாது என்று சூழ்ச்சி செய்கின்றனர்.  மாவளி கதை மீண்டும் தொடர வேண்டுமா? அந்த கேள்விக்கு விடை அளிக்கும் நான்தான்

வருகிற தேர்தல் நாளாகும்.

  நான் பெரியார் பரம்பரையைச் சேர்ந்தவன். அண்ணா வழியில் வந்தவன். சுயமரியாதை உணர்வும், திராவிட உணர்வும் என்னுள் இருக்கிறது. அந்த உணர்வோடு தான் நாங்கள் இருக்கிறோம். எங்கள் கட்சி கூட்டணி வேட்பாளர்கள் உள்ளனர்.

நாட்டுக்காகவும், மக்கள் மகிழ்ச்சியாக வாழவும் தேர்தலில் போட்டியிடுகின்றனர். நாங்கள் 5 ஆண்டு கால ஆட்சியில் செய்த சாதனைகளை கூறி 6வது முறையாக ஆட்சியை தொடர எங்களுக்கு வாக்களியுங்கள் என்று கேட்கிறோம். ஏழை, எளிய

மக்களுக்கு நல்ல திட்டங்களை வழங்குவோம் என்று கூறி வருகிறோம்.  ஜெயலலிதா ஆட்சியில்   அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் வீடு புகுந்து கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பப்பட்டனர். என்னை இரவு 12 மணிக்கு படுக்கை அறையில் இருந்து

கைது செய்து சிறையில் அடைத்தார். அந்த ஆட்சித் தொடரவா? என்னுடைய ஆட்சியில் அமர்த்தப்பட்ட 12 ஆயிரம் சாலை பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பினார். அதே போல் என்னுடைய ஆட்சியில் கொண்டு வந்த பல்வேறு திட்டங்களை

சிதைத்து  ரத்து செய்தது அந்த ஆட்சி. அந்த ஆட்சி தொடர நீங்கள் நினைக்கிறீர்களா?

காமராஜர் ஏழை பிள்ளைகள் படிக்க மதிய உணவு திட்டத்தை கொண்டு வந்தார். அதன் மூலம் ஆயிரம் ஆயிரம் ஆரம்ப பாடசாலைகள் உருவாகின. அதனால் ஆயிரம் ஆயிரம் ஆசிரியர்களுக்கு வேலை கிடைத்தது. இந்த பிள்ளைகள் பள்ளி படிப்பை

முடித்து பட்டப்படிப்பு படிக்கும் சூழ்நிலையில் திமுக ஆட்சிக்கு  வந்தது. நாங்கள் பட்டப்படிப்பை இலவசமாக அளித்து வருகிறோம். கலைக் கல்லூரி, மருத்துவக் கல்லூரிகள் தற்போது பெருகி உள்ளது. விவசாயி ஒருவரை பார்த்து “உன் மகனை

எங்கே“ என்று கேட்டால், அவன் பட்டப்படிப்பை படித்து விட்டு பாரீசில் வேலை செய்கிறான். மாதம் பத்தாயிரம், ஒரு லட்சம் என்று சம்பாதிக்கிறான் என்பார். இந்த முன்னேற்றம் எப்படி வந்தது? படிப்படியாக கல்வித் தரத்தை காமராஜர்

உயர்த்தினார். ஒரு அரசு கொண்டு வந்த திட்டத்தை இன்னொரு அரசு வந்தாலும் தொடர்ந்து  செயல்படுத்த வேண்டும். அதன்படி காமராஜர் பள்ளிகளுக்கு கொண்டு வந்த மதிய உணவு திட்டத்தை அதன் பின் ஆட்சிக்கு வந்த நண்பர் எம்.ஜி.ஆர்.

சத்துணவு திட்டமாக உயர்த்தினார். நான் ஆட்சிக்கு வந்ததும் சத்துணவில் வாரத்திற்கு ஒரு முட்டை வழங்கினேன்.

ஒரு முட்டை இரண்டு முட்டை ஆனது, இரண்டு முட்டை மூன்று முட்டை ஆனது, தற்போது வாரம் முழுவதும் சத்துணவுடன் வழங்கப்பட உள்ளது. புரத சத்து இருக்க வேண்டும் என்பதற்காகவே முட்டைகள் வழங்கப்படுகிறது. அதன் மூலம் இந்திய

அளவில் விளையாட்டுப் போட்டிகளில் பிள்ளைகள் தங்க மெடல்களை வாங்க வேண்டும். உயர்ந்துள்ள கல்வி நிலைமையும், ஆட்சி நிலைமையும் எண்ணி பாருங்கள். 5 ஆண்டு சாதனைகளை சொல்லி ஆதரவு கேட்கிறேன். நீங்கள் மறுத்தாலும் நான்

மறக்க மாட்டேன். ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தால் 5 முட்டைகள் இருக்காது. ஒரே ஒரு முட்டையாக தான் ஆட்சி இருக்கும். நீங்கள் என்னை மறந்தாலும், இறக்கி விட்டாலும், துரத்தி விட்டாலும், தோல்வி அடைய செய்தாலும் நான் உங்களை

மறக்க மாட்டேன். உங்களை விடவும் மாட்டேன். உலக சிம்மாசனத்தில் வைத்து அழகு பார்ப்பேன்.  இவ்வாறு கருணாநிதி பேசினார்.

No comments:

print