சென்னை: தமிழகத்தில் மூன்று மாவட்டங்களில் நாளை மறு வாக்குப் பதிவு நடைபெறுகிறது.
இதுகுறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி பிரவீன் குமார் கூறுகையில்,
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி மற்றும் கன்னியாகுமரி மாவட்டம் ஒரு இடத்திலும் பதிவான வாக்குகளின் எண்ணிக்கைக்கும், மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கைக்கும் ஏராளமான வித்தியாசங்கள் இருப்பதால் அதுபற்றி தேர்தல் ஆணையத்திற்கு அறிக்கை அனுப்புவோம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி தொகுதியில் சமத்திகுப்பம் வாக்குச்சாவடியில் 7 மணியளவில் இரண்டு பிரிவினர் இடையே மோதலில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் அடித்து நொறுக்கப்பட்டது.
இந்த மூ்ன்று வாக்குச்சாவடிகளிலும் 15ந் தேதி மறுவாக்குப்பதிவு நடைபெறும் என்றார் அவர்.
கள்ள ஓட்டு இல்லை
பிரவீன் குமார் மேலும் கூறுகையில்,
இந்த தேர்தலில் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாததால் அடையாள அட்டை வைத்திருக்கும் பலராலும் ஓட்டுப்போட முடியாமல் போய்விட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இடம்பெற்றிருக்கிறதா என்பதை சரிபார்த்துக்கொள்ள வேண்டும் என்று நாங்கள் பலமுறை நினைவூட்டினோம். அதற்குப் பிறகும் பெயர் இடம்பெற்றிருப்பதை உறுதிசெய்யாவிட்டால் நாங்கள் பொறுப்பேற்க முடியாது. இந்த தேர்தலில் கள்ள ஓட்டு ஏதும் பதிவாகவில்லை.
யாருக்கும் ஓட்டுப்போட விரும்பாதவர்கள் 49 ஓ' என்று எழுதி பதிவேட்டில் கையெழுத்திட வேண்டும். அந்த வகையில், எத்தனை பேர் அவ்வாறு கையெழுத்து போட்டுள்ளார்கள் என்பது நாளை (14.04.2011) தெரிய வரும் என்றார் அவர்.

No comments:
Post a Comment