Sunday, April 3, 2011

தமிழகத்தின் மக்கள் தொகை 7.21 கோடி

சென்னை: 2011ம் ஆண்டிற்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி கடந்த 10 ஆண்டுகளில் தமிழ் நாட்டின் மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்து 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 858 ஆகியுள்ளது.


மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளை மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் கோபாலகிருஷ்ணன் நேற்று சென்னையில் வெளியிட்டார். அதன் விவரம் பின் வருமாறு,

இந்தியாவின் உத்தேச மக்கள் தொகை 1,21,01,93,422. இதில் 62 கோடியே 37 லட்சத்து 24 ஆயிரத்து 248 ஆண்களும், 58 கோடியே 64 லட்சத்து 69 லட்சத்து 174 பெண்களும் அடக்கம். தமிழ்நாட்டின் உத்தேச மக்கள் தொகை 7 கோடியே 21 லட்சத்து 38 ஆயிரத்து 958 பேர். இதில் 3 கோடியே 61 லட்சத்து 58 ஆயிரத்து 871 ஆண்களும், 3 கோடியே 59 லட்சத்து 80 ஆயிரத்து 87 பெண்களும் அடக்கம்.

6 வயதுக்குட்பட்ட குழந்தைகள் எண்ணிக்கை குறைவு

இந்திய மக்கள் தொகையில் 5.96 சதவீதம் தமிழக மக்கள் தொகை. இதியாவில் மக்கள் தொகை அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 7வது இடத்தை தக்கவைத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் மக்கள் தொகை 15.6 சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது தமிழ்நாட்டின் மக்கள் தொகை எண்ணிக்கை 97 லட்சம் அதிகரித்துள்ளது.

கடந்த 2001ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 987 பெண்கள் இருந்தனர். ஆனால் 2011ம் ஆண்டில் ஆயிரம் ஆண்களுக்கு 995 பெண்கள் உள்ளனர்.

2001ம் ஆண்டில் 6 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 942 பெண் குழந்தைகள் என்று இருந்தது. 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு 946 பெண் குழந்தைகள் என்று அதிகரித்து இருக்கிறது.

2001ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டில் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் 72 லட்சத்து 35 ஆயிரத்து 160 பேர் இருந்தனர். அதாவது 11.59 சதவீதமாக இருந்தது. தற்போதைய கணக்கெடுப்பின்படி 68 லட்சத்து 94 ஆயிரத்து 821 குழந்தைகள் தான் இருக்கின்றனர். அதாவது 11.59 சதவீதத்தில் இருந்து 9.56 சதவீதமாக குறைந்துள்ளது.

எழுத்தறிவு விகிதம் அதிகரி்ப்பு

2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குழந்தைகளின் பாலின விகிதம் 946 ஆக உள்ளது. இதில் 35 லட்சத்து 42 ஆயிரத்து 351 ஆண் குழந்தைகளும், 33 லட்சத்து 52 ஆயிரத்து 240 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

தமிழ்நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தியானது ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 555 நபர்கள் இருக்கின்றனர். இது கடந்த 2001-ல் 480 பேராக இருந்தது.

தமிழ் நாட்டின் எழுத்தறிவு விகிதம் 73.45 சதவீதத்தில் இருந்து 80.33 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதில் 86.81 சதவீதம் ஆண்களும், 73.86 சதவீதம் பெண்களும் எழுத்தறிவுள்ளவர்கள்.

குறைந்த மக்கள் தொகை கொண்ட நீலகிரி

மக்கள் தொகை மிகவும் குறைவாக உள்ள மாவட்டம் நீலகிரி. இங்கு 2001-ம் ஆண்டு மக்கள் தொகை 7 லட்சத்து 62 ஆயிரத்து 141 (7.3 சதவீதமாக) இருந்தது. தற்போது 2011-ம் ஆண்டுக் கணக்கெடுப்பின்படி 7 லட்சத்து 35 ஆயிரத்து 71 (-3.6 சதவீதமாக) உள்ளது. மக்கள் அடர்த்தி 299-ல் இருந்து 288 ஆக குறைந்துள்ளது. குழந்தைகளின் எண்ணிக்கையும் 85 ஆயிரத்து 860-ல் இருந்து 61 ஆயிரத்து 644-க குறைந்துள்ளது. இதில் 31 ஆயிரத்து 99 ஆண் குழந்தைகளும், 30 ஆயிரத்து 545 பெண் குழந்தைகளும் அடக்கம்.

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களின் மக்கள் தொகை விவரம்:

மாவட்டம்-2001-ல் மக்கள் தொகை-2011-ல் மக்கள் தொகை

1.திருவள்ளூர்-27,54,756- 37,25,697

2.சென்னை-43,43,645- 44,81,087

3.காஞ்சிபுரம்-28,77,468- 39,90,897

4.வேலூர்-34,77,317- 39,28,106

5.தர்மபுரி-12,95,182- 15,02,900

6.கிருஷ்ணகிரி-15,61,118- 18,83,731

7.திருவண்ணாமலை-21,86,125- 24,68,965

8.விழுப்புரம்-29,60,373- 34,63,284

9.சேலம்-30,16,346- 34,80,008

10.நாமக்கல்-14,93,462- 17,21,179

11.ஈரோடு-20,16,582- 22,59,608

12.நீலகிரி-7,62,141- 7,35,071

13.கோவை-29,16,620- 34,72,578

14.திருப்பூர்-19,20,154- 24,71,222

15.திண்டுக்கல்-19,23,014- 21,61,367

16.கரூர்-9,35,686- 10,76,588

17.திருச்சி-24,18,366- 27,13,858

18.பெரம்பலூர்-4,93,646- 5,64,511

19.அரியலூர்-6,95,524- 7,52,481

20.கடலூர்-22,85,395- 26,00,880

21.நாகப்பட்டினம்-14,88,839- 16,14,069

22.திருவாரூர்-11,69,474- 12,68,094

23.தஞ்சாவூர்-22,16,138- 24,02,781

24.புதுக்கோட்டை-14,59,601- 16,18,725

25.சிவகங்கை-11,55,356- 13,41,250

26.மதுரை-25,78,201- 30,41,038

27.தேனி-10,93,950- 12,43,684

28.விருதுநகர்-17,51,301- 19,43,309

29.ராமநாதபுரம்-11,87,604- 13,37,560

30.தூத்துக்குடி-15,92,769- 17,38,376

31.திருநெல்வேலி-27,03,492- 30,72,880

32.கன்னியாகுமரி-16,76,034- 18,63,174.

No comments:

print