Friday, April 1, 2011

தமிழகத்தில் அ.தி.மு.க.,வுக்கு அமோக ஆதரவு : கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பு




சென்னை: தமிழகத்தில் நடக்கவிருக்கும் சட்டசபை தேர்தலில் பெரும்பாலானோர் அ.தி.மு.க., ஆட்சி அமைப்பதையே விரும்புவதாகவும், இந்த கூட்ணிக்கே ஓட்டளிக்க இருப்பதாகவும், கல்லூரி மாணவர்கள் நடத்திய கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர்.

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் டைரக்டர் ராஜநாயகம் தலைமையில் தமிழகம் முழுவதும் மக்களின் கருத்துக்களை கேட்டறிந்தனர். இதன்படி 48.6 சதவீதத்தினர் அ.தி.மு.க., கூட்டணிக்கே ஓட்டளிக்கவிருப்பதாகவும், 41.7 சவீதத்தினர் தி.மு.க., கூட்டணிக்கு ஓட்டளிக்க விரும்புவதாகவும் கூறியுள்ளனர்.

மார்ச் மாதம் 21 ம் தேதி முதல் 29 ம் தேதிவரை எடுக்கப்பட்ட இந்த கருத்துக்கணிப்பில் 51. 1 சதவீதத்தினர் அ.தி.மு.க கூட்டணியே ஆட்சிக்கு வரும் என்றும், 36. 7 சதவீதத்தினர் மட்டும் தி.மு.க,.கூட்டணி ஆட்சிக்கு வரும் என்றும் தெரிவித்துள்ளனர். அ.தி.மு.க., 105 சீட்களையும், தி.மு.க., 70 சீட்களையும் பெறும் என்றும் , இரு கட்சிகளும் செல்வாக்குள்ள 59 தொகுதிகள் மிக கடும் போட்டியாக இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.

ஸ்பெக்ட்ரம்விவகாரத்தினால் ராஜா கைது , விலைவாசி உயர்வு, குடிநீர் பற்றாக்குறை , மின்வெட்டு உள்ளிட்ட பிரச்னைகள் மக்கள் மனதை கடுமையாக பாதித்துள்ளதாவுகவும் தெரியவந்ததாக கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

No comments:

print