ஓசூர்: கெலமங்கலம் அருகே தி.மு.க., - அ.தி.மு.க., மற்றும் தே.மு.தி.க., கட்சிகளை சேர்ந்த 700 பேர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர். கவுதாளம் அடுத்த கோட்டட்டி கிராமத்தில், மாற்று கட்சியினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் இணையும் விழா நடந்தது. பொம்மதாதனூர் பஞ்சாயத்து தலைவர் கிருஷ்ணப்பா தலைமை வகித்தார்.
ஏ.ஐ.ஓய்.எஃப் பொறுப்பாளர் சரவணன் வரவேற்றார். தளி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், மாநில செயற்குழு உறுப்பினர் லகுமையா ஆகியோர் முன்னிலையில் கெலமங்கலம் அடுத்த மாரேகவுண்டப்பள்ளி, சாலிவாரம், மல்லசந்திரம், காந்திநகர், குஞ்சஅக்ரஹாரம், தேன்கொண்டா, உள்ளேநத்தம், காரமுச்சந்திரம், குரும்பரஅள்ளி, மூக்கண்டப்பள்ளி உள்ளிட்ட 20 கிராமங்களை சேர்ந்த தி.மு.க., -அ.தி.மு.க.,- தே.மு.தி.க., கட்சியினர் 700 பேர், அக்கட்சிகளில் இருந்து விலகி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்.
No comments:
Post a Comment