ஆத்தூர் : தமிழக சட்டசபை தேர்தலில், ஐ.ஜே.கே., தலைமையில், மூன்றாவது அணி போட்டியிடுகிறது. அதில், ஐ.ஜே.கே., சமூக சமத்துவப்படை, யாதவ மகாசபை, தமிழ்நாடு வாணியர் பேரவை, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், வ.உ.சி., பேரவை உள்ளிட்ட கட்சிகள், சமுதாய அமைப்புகள், கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. அதன்படி, சமூக சமத்துவப்படை கட்சியின் சார்பில், ஏழு தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை, சேலம் மாவட்டம் ஆத்தூரில் அக்கட்சியின் தலைவர் சிவகாமி வெளியிட்டார்.
No comments:
Post a Comment