சென்னை : பொதுமக்களிடம் பணம் பறிமுதல் நடவடிக்கை மேற்கொள்ளும் முன், தங்களுக்கு கிடைத்த தகவலை உறுதி செய்து கொண்டு, தகவலின் நம்பகத்தன்மை திருப்தி அளிப்பதாக இருக்கும் பட்சத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
தேர்தலில் தங்களுக்கு சாதகமாக ஓட்டளிக்க வாக்காளர்களுக்கு அரசியல் கட்சிகள் பணம், பரிசுப்பொருட்கள் வழங்குவதை தடுக்க தமிழகம் முழுவதும் தேர்தல் கமிஷன் பறக்கும் படை அமைத்து அதிரடி சோதனை நடத்தி வருகிறது. ஆனால் அன்றாடம் நடக்கும் அதிரடி சோதனையால் அதிகம் பாதிக்கப்படுவது அப்பாவி மக்கள் தான் என்பது பரவலாக எழுந்துள்ள புகார்.மேலும் பறக்கும் படையினர் சோதனை என்ற பெயரில் வாகனங்களில் செல்லும் பொதுமக்களிடம் குறிப்பாக பெண்களிடம் அத்துமீறி நடப்பதாகவும் ஒரு சில இடங்களில் புகார்கள் எழுந்துள்ளன. குற்றவாளி என்று உறுதி படுத்துவதற்கு முன்பே சோதனை என்ற பெயரில் அவர்களை வீடியோவில் பதிவு செய்யப்படுகிறது. இது தவறான நடவடிக்கை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பெண்களை சோதனையிடும் போது வீடியோ எடுக்கக் கூடாது, சிறு வணிகர்கள் கொண்டு செல்லும் பணத்தை பறிமுதல் செய்யக்கூடாது, அதற்கு பதிலாக அவர்களின் முகவரி உள்ளிட்ட விபரங்களை சேகரித்து வைத்துக்கொள்ளலாம் என்பது போன்ற கோரிக்கைகளை வணிகர்சங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன. மேலும் தேர்தல் கமிஷனை கண்டித்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கடையடைப்பு போராட்டத்தையும் வணிகர்கள் நடத்தி வருகிறார்கள். தேர்தல் கமிஷனின் சோதனை தொடர்ந்தால் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஏற்கனவே அறிவித்துள்ளார்.
ஐகோர்டில் வழக்கு : இதற்கிடையில் தேர்தல் கமிஷனின் அதிரடி சோதனைக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. தேனி மாவட்டம் ஜக்கம்பட்டி திருவள்ளுவர்நகரைச் சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் தில்லை நடராஜன் பொதுநலன் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். வாக்காளர்களை குறிப்பிட்ட நபர்களுக்கு ஓட்டுப்போட செய்வதற்காக அவர்களுக்கு பணம், பொருட்களை சட்டவிரோதமாக கொடுப்பதற்கு முயன்றால் அவற்றை பறிமுதல் செய்வதற்கு தேர்தல் விதிப்படி நியமிக்கப்பட்டுள்ள பறக்கும் படையில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளது. ஆனால் சாலையில் செல்லும் பொதுமக்களிடம் இருந்து பணத்தையும், வியாபாரத்துக்காக சிறுவாகனங்களில் கொண்டு செல்லும் பொருட்களையும் தேர்தல் நடவடிக்கை என்ற பெயரில் பறித்துவிடுகின்றனர். பொதுமக்களிடம் இவர்கள் மேற்கொள்ளும் பறிமுதல் அனைத்தும் சட்டவிரோதமாகும். எனவே பொதுமக்கள் சுதந்திரமாக பணம், பொருட்களுடன் செல்வதற்கு பறக்கும் படையினர் இடையூறு செய்வதை தடை செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறியிருந்தார். இந்த வழக்கு நேற்று, நீதிபதிகள் தர்மாராவ், எம்.வேணுகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தேர்தல் கமிஷன் சார்பில் வாதிட்ட வக்கீல், பொருட்களை பறிமுதல் செய்வதற்கு தேர்தல் கமிஷனுக்கு அதிகாரம் உள்ளது என்றும், இதுவரை ரூ.20 கோடி மதிப்புள்ள பணம், பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்டார். அதற்கு, அரசியல் கட்சிகளையும், வேட்பாளர்களையும் ஒழுங்குபடுத்தும் நோக்கத்தில் பின்பற்றப்படும் பறிமுதல் நடவடிக்கைகளை, பொதுமக்களிடம் மேற்கொண்டு அவர்களை பாதிப்படையச் செய்ய முடியுமா?என கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளிக்க தேர்தல் கமிஷன் கால அவகாசம் கோரியது. இதனையடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் தர்மாரவ், வேணுகோபால் அடங்கிய பெஞ்ச் : தேர்தல் கமிஷன் அமைத்துள்ள பறக்கும் படை அதிகாரிகள், பணம் பட்டுவாடா குறித்த தகவல் வந்தால் அதனை உறுதி படுத்திக் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
முதல்வர் அறிக்கை : தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், இந்த கெடுபிடிகள் குறித்து முதல்வர் கருணாநிதி நேற்று வெளியிட்ட அறிக்கையில் "தேர்தல் கமிஷன், எப்போதும் இல்லாத அளவிற்கு இந்த முறை அதிக கெடுபிடி செய்து வருகிறது. வாகன சோதனையில், ஆடு, கோழிகளைக் கூட விட்டுவைக்கவில்லை,'' என, கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
29ம் தேதி கடையடைப்பு : தேர்தல் கமிஷனின் வாகனச் சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து, 29ம் தேதி கடை அடைப்பு நடத்த வணிகர்கள் முடிவு செய்துள்ளனர். தேர்தல் கமிஷன் கெடுபிடியை கண்டித்து தமிழகம் முழுவதம் பல்வேறு நகரங்களில் வணிகர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment