Thursday, March 24, 2011

ஜெ., மனுத்தாக்கலின்போது செருப்பு வீச்சு : தொண்டர்கள் மீது போலீசார் தடியடி

திருச்சியில் ஸ்ரீரங்கம் தொகுதியில் போட்டியிடும் ஜெ., இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வந்தபோது இவருடன் வந்த அ.தி.மு.க., தொண்டர்கள் மீது செருப்பு வீசப்பட்டதால் .அ.தி.மு.க., - தி.மு.க., தொண்டர்கள் மோதும் சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தினரை கலைத்தனர்.
அ.தி.மு.க., பொதுசெயலர் இன்று வேட்பு மனுத்தாக்கல் ஜெ., தனி விமானம் மூலம் திருச்சி வந்தார். 11 மணி அளவில் திருச்சி கலெக்டர் ஆபீசுக்கு தங்களுடைய தொண்டர்கள் புடைசூழ வந்தார். இவர் முன்பு செல்ல இவரது பின்னால் அ.தி.மு.க., தொண்டர்கள் சாரை,சாரையாக வந்து கொண்டிருந்தனர்.

இவர் மனுத்தாக்கல் செய்ய வரும்போது ஜெ., வை எதிர்த்து போட்டியிடும் தி.மு.க., வேட்பாளர் ஆனந்தும் öன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்ய வந்தார். இந்நேரத்தில் இருதரப்பு தொண்டர்ரகள் குவிந்திருந்ததால் பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில் ஜெ.., மனுத்தாக்கல் செய்ய கலெக்டர் ஆபீஸ் வளாகத்திற்குள் சென்ற போது, தி.மு.க.,வினர் அ.தி.மு.க.,வினரை நோக்கி செருப்பு வீசியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருதரப்பும் பலத்த குரலில் கத்தியபடி மோதும் சூழல் ஏற்பட்டது. வன்முறை ஏதும் நிகழாமல் தடுக்க போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து அங்கு பதட்டம் தொற்றிக்கொண்டது.

மனுத்தாக்ல் முடிந்து செல்லும்போது ஜெ,.வை அணிவகுத்து வந்த வாகனங்கள் மீது கல் வீசப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பும், பதட்டமும் ஏற்பட்டது.

No comments:

print