கெங்கவல்லி: சமூக சமத்துவப்படையின் நிறுவனத் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., கெங்கவல்லி(தனி) சட்டசபை தொகுதியில் போட்டியிடுவார் என, கூறப்படுகிறது. தமிழகத்தில், ஐ.ஜே.கே., தலைமையில் மூன்றாவது அணி அமைத்து சட்டசபை தேர்தலை சந்திக்க உள்ளது. அதில், சமூக சமத்துவப்படை, யாதவ மகா சபை, தமிழ்நாடு வாணியர் பேரவை, தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், வ.உ.சி., பேரவை உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சங்கங்கள் கூட்டணியில் இடம்பிடித்துள்ளன. இக்கூட்டணி சார்பில் கெங்கவல்லி(தனி) சட்டசபை தொகுதியில், சமூக சமத்துவப்படை கட்சியின் நிறுவனத் தலைவர் சிவகாமி ஐ.ஏ.எஸ்., போட்டியிடுவதாக தகவல் வெளியாகி உள்ளது
No comments:
Post a Comment