Sunday, February 6, 2011

தெருமுனை பிரச்சாரம்

மோகனூர்: நகர அ.தி.மு.க., சார்பில், "2ஜி' ஸ்பெக்ட்ரம் முறைகேடு, விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை முன்வைத்து, தெருமுனை பிரச்சாரக்கூட்டம் மோகனூரில் நடந்தது.

மோகனூரில் உள்ள 15 வார்டுகளிலும் நடந்த தெருமுனை பிரச்சாரக் கூட்டத்துக்கு, நகரச் செயலாளர் பாலு தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் காந்தி முருகேசன், இளைஞர், இளம்பெண்கள் பாசறை மாவட்டச் செயலாளர் நமேஷ், மாவட்ட இலக்கிய அணித்தலைவர் தென்னரசு, எம்.ஜி.ஆர்., மன்றச் செயலாளர் ராஜேஸ் கண்ணா ஆகியோர் பேசினர். நகர பொருளாளர் தாவீது, துணைச்செயலாளர் சிவஞானம், அவைத்தலைவர் பெரியசாமி, ஒன்றிய இளைஞரணி செயலாளர் முருகேசன், யூனியன் கவுன்சிலர் சந்திரமோகன், ராசிபாளையம் பஞ்சாயத்து செயலாளர் சரவணன் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

print