போபால் : மத்தியப்பிரதேச மாநிலத்தில் நடக்கவுள்ள சட்டசபைக்கான இடைத்தேர்தல் பிரசாரத்தில், நடிகர், நடிகைகளை பயன்படுத்த பா.ஜ., மற்றும் காங்கிரஸ் கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள குக்ஷி சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ஜமுனாதேவி, கடந்த ஆண்டு காலமானார். இவர் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர். சோன்கட்ச் சட்டசபை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வான சஜ்ஜன்சிங் வர்மா, கடந்த பார்லிமென்ட் தேர்தலில் போட்டியிட்டு, எம்.பி.,யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.இதையடுத்து, அந்த இரண்டு தொகுதிகளுக்கும் விரைவில் சட்டசபை தேர்தல் நடக்க உள்ளது. இழந்த தொகுதிகளை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும், இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றிபெற்றே தீரவேண்டும் என்று ஆளும் கட்சியான பா.ஜ.,வும் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
எனவே, இரண்டு கட்சிகளும் இடைத்தேர்தல் பிரசாரத்தில் பெரிய தலைவர்கள் தவிர, நடிகர், நடிகைகளை ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில், நடிகர்கள் கோவிந்தா, ராஜ் பாப்பரும், பா.ஜ., சார்பில், நடிகைகள் ஹேமமாலினி, ஸ்மிதா இரானி உள்ளிட்டோர் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.
No comments:
Post a Comment