சென்னை : தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார். சேலம் மாவட்டம் இடப்பாடி, ஒமலூரில் பா.ம.க., வின் பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக ராமதாஸ் இன்று சேலம் வந்தார். அப்போது நிருபர்கள் தேர்தல் கூட்டணி குறித்து அவரிடம் கேள்வி எழுப்பினார்கள். முதலில் பதில் சொல்ல மறுத்த ராமதாஸ் பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணியில் பா.ம.க. இல்லை என்று நான் ஒருபோதும் சொல்லவில்லை. கூட்டணி பற்றி நிருபர்கள் கேட்டதற்கு இன்னமும் தேர்தல் கூட்டணி குறித்து முடிவு எடுக்கவில்லை என்றுதான் குறிப்பிட்டேன். கூட்டணி விஷயத்தில் முதல்வர் கருணாநிதியின் நம்பிக்கை வீண் போகாது, என்று கூறினார்.
கடந்த இரு தினங்களுக்கு முன் டில்லியில் முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்றிருந்த முதல்வர் கருணாநிதி அங்கு அளித்த பேட்டியொன்றில், தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்கிறது, என்று கூறினார். ஆனால் அதனை அன்றிரவே ராமதாஸ் மறுத்தார் . இதையடுத்து டில்லியில் இருந்து திரும்பிய கருணாநிதி, நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், பா.ம.க. குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையி்ல், சந்தர்ப்ப சூழ்நிலைகள், அவர்கள் சார்பில் பொறுப்பில் உள்ளவர்கள் எங்களுடன் கொண்ட தொடர்புகள் இவற்றை வைத்து பா.ம.க.வும் திமுக கூட்டணியில் இடம்பெறக்கூடும் என்பதை டில்லியில் அனுமானமாகக் கூறினேன். அதை பா.ம.க. தலைவர் மறுத்து இருக்கிறார். இருப்பதாக சொன்ன பிறகு இல்லையென்று அவர்கள் மறுத்துள்ளனர். எனவே, தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கே இடமில்லை, என்று கூறினார்.
வரும் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி அமைப்பது என்ற தெளிவான முடிவு இல்லாமல் பா.ம.க. திணறி வருவது இதில் இருந்தே தெரிகிறது. ஆரம்பத்தில் கூட்டணியில் சேர்க்கும்படி தி.மு.க.வுக்கு கடிதம் எழுதிய ராமதாஸ், பின்னர் அ.தி.மு.க. கூட்டணிக்கு முயற்சி செய்தார். இந்நிலையில் முதல்வர் கருணாநிதியே பா.ம.க.வும் தி.மு.க. கூட்டணியில் இருக்கிறது என்று கூறியும், நாங்கள் இன்னும் முடிவு எடுக்கவில்லை என்று கூறி மறுத்தார். இப்போது அதையும் மறுத்து, முதல்வரின் நம்பிக்கை வீண் போகாது என்று கூறி தொண்டர்களை குழப்பமடையச் செய்திருக்கிறார்.

No comments:
Post a Comment