சென்னை: சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் தமிழகத்தில் அரசின் இலவச டிவிகளை வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சட்டசபைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.எனவே தமிழக அரசு வழங்கும் இலவச வண்ணத் தொலைக்காட்சிகளை விநியோகிகக் கூடாது. மீறி வழங்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தேர்தல் முடிந்த பிறகே டிவிகளை வழங்கலாம் என்றும் தேர்தல்
ஆணையம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், தேர்தல் நடத்தை விதிமுறைகளை முறையாக கடைப்பிடிப்பது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் விவாதிக்க நாளை மறு நாள் அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னையில் கூட்டப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் தி.மு.க., அ.தி.மு.க., காங்கிரஸ் உள்பட அங்கீகரிக்கப்பட்ட 9 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்கிறார்கள். இந்த கூட்டத்தில் பிரசாரம், உள்ளிட்ட தேர்தல் விதி முறைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
No comments:
Post a Comment